சூரியன் என்பது பிரதானமானது; முக்கியமாக விளங்குவது. பிரம்மா, விஷ்ணு, சிவன் எனும் மும்மூர்த்திகளின் பிரதிநி தியாகவும், கண்களால் காணக்கூடிய ஏகமூர்த் தியாகவும் விளங்குபவர் சூரியன். "எப்போதும் ஒருவராக சஞ்சரிப்பவர் யார்' என்ற கேள்விக்கு யட்சப் பிரசன்னத்தில் விடை தரப்படுகிறது- "அவர் சூரியன்தான்' என்று. "சூரியன் நிலை பெறும் இடம் எது' என்பது மற்றொரு கேள்வி.

அதற்கு விடை- "சத்தியம் என்னும் பரமாத்மா ரூபத்தில் நிலைபெறுபவர்' என்று.

Advertisment

நமது ஆன்மாவைப் பிரதிபலிப்பவர் சூரியன். சாஸ்திரப்படியும் நவகிரகங்களில் சூரியனே அரசர். ஒருவருக்கு ஆத்மபலம் அமைய வேண்டுமானால், ஜாதகத்தில் சூரியன் பலம் அமையவேண்டும். ஆதித்ய ஹிருத்ய மந்திரத்தால் இராமன் இராவணனை வெல்லும் ஆற்றலைப் பெற்றார் என்பது இராமா யணத்தின் கூற்று. வேதமந்திரங்களில் தலை சிறந்த மந்திரம் காயத்ரி. அந்த மந்திரத்துக்கு உரியவர் கதிரவன்தான். சூரிய நமஸ்காரம் செய்வதன்மூலம் சரீரபலமும், ஆன்மிக பலமும் அடையமுடியும் என்பது அனுபவத் தில் கண்ட உண்மை.

parigaram

ஜனன லக்னம் என்பது ஜாதகத்தில் முக்கிய மான முதல் பாவகம். இந்த பாவகத்திற்குக் காரகன் சூரியன். சுயநிலை, சுயஉணர்வு, செல்வாக்கு, கௌரவம், ஆற்றல், வீரம், பராக் கிரமம், சரீர சுகம், நன்னடத்தை, நேத்திரம் (கண்கள்), உஷ்ணம், ஒளி, அரசாங்க ஆதரவு முதலியவற்றின் காரகன் சூரியன்தான். பிதுர் (தந்தை) காரகனும் சூரியனே. சூரியனது குணம்- சாத்வீகம். தாமிர உலோகத்திற்கானவர். அவரது நிறம் கருஞ்சிவப்பு. உடல் எலும் புக்குரியவர் கதிரவன். கிழக்கு திசையே கதிர வனின் திக்காகும். மொழி சமஸ்கிருதம்.

ஒருவரது ஜனன ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றிருந்தால் ராஜபோக வாழ்வுண்டாகும். ஓர் ஆணின் ஜாதகத்தில் சூரியபலம் ஓங்கியிருந்தால் ஆண்மை எனும் ஆற்றலில் அவர் சிறந்து விளங் குவார். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சூரியபலம் சிறப்பாக இருந்தால் ஆகர்ஷன சக்தி ஏற்படும். சிறந்த கற்புடையவராகத் திகழ்வார். சூரியனது சொந்த வீடு சிம்மம்; உச்சவீடு மேஷம்; நீச வீடு துலாம். ரிஷபம், மகரம், கும்பம் ஆகியவை பகை வீடுகள். சூரியனுக்கு சந்திரன், செவ்வாய், குரு மூவரும் நண்பர்கள்.

சூரியன் நீசவீடாகிய துலாம் மற்றும் பகை வீடுகளான ரிஷபம், மகரம், கும்பம் ஆகியவற்றில் நற்பலன் தரமாட்டார். அங்கும் அவர் நல்ல பலனைத் தர கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்துகொள்ள வேண்டும்.

பரிகாரம்-1

ஒருமுறையேனும் கும்பகோணம் அருகேயுள்ள சூரியனார் கோவிலுக்குச் சென்று வணங்கி வர வேண்டும். உஷா தேவி, சாயா தேவி ஆகியோருடன் விளங்குகிறார். ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் காணப்படுகிறார்.

பரிகாரம்-2

"ஓம் ஹ்ரீம் ஆதித்யாயஸ ஸோமாய

மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச

ராகுவே கேதவே நமஹ'

எனும் மந்திரத்தை தினமும் 16 முறை ஜெபித்து வந்தால் வறுமை, பிணி, பகை நீங்கி மேன்மைய டையலாம்.

பரிகாரம்-3

மேற்கண்டவாறு மந்திரத்தை உச்சரிக்க முடியாதவர்கள் "ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது நவகிரக சகாய நமஹ' என்று தினமும் 16 முறை சொல்லி வணங்கி நலம்பெறலாம். இவையனைத்தும் அனுபவத்தில் கண்ட உண்மை.

செல்: 94871 68174